தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஏழு வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.தற்போதும் அவர் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் ’டிரைவர் ஜமுனா’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் பாரிஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கிருந்து கொண்டே கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றார். அவ்வகையில் தற்போது ஈபில் டவர் முன்பு அவர் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

ஈபில் டவர் முன்பு கிளாமர் உடையில் கலக்கும் இந்த போட்டோ சூட் புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
