இந்தியாவில் முதல்முறையாக அதுவும் தமிழகத்தில் 44வது சர்வதேச ஒலிபியாட் போட்டி நடைபெற்ற வருகிறது. அதற்கான தொடக்க விழா கடந்த ஜூலை 28ஆம் தேதி சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது. அப்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் நடிகர் கமல்ஹாசனின் பின்னணி குரலில் தமிழ்நாட்டின் கலாச்சார வளர்ச்சி குறித்த நிகழ்த்துக் கலை நடைபெற்றது.

1200 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடும் பாறையில் தமிழர் கலை,கலாச்சாரம் செழித்து இருந்ததற்கான சான்று முதலாம் நூற்றாண்டில் கரிகால சோழன் கல்லணை கட்டியது குறித்து முப்பரிமாண படத்துடன் கமல் குரலில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் உடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் குழுவினர் கலந்துரையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், உலக நாயகனுடன் சில மணி நேரங்கள் செலவழிக்க நேரம் கிடைத்ததை எண்ணி நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய அறிவு,அவர் அளித்த விளக்கங்கள் மற்றும் அவர் எங்களுக்கு கூறிய நுணுக்கங்கள் ஆகியவை எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்று விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க