தமிழ் திரை உலகில் பிரபல பாலகரான ஸ்ரீநிவாஸ் மகளின் போட்டோ சூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவில் முன்னணி பாடவர்களில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ரீநிவாஸ். கமல் நடித்த நம்மவர் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற சொர்க்கம் என்பது பூமி என்ற பாடலின் மூலம் இவர் பாடகாரராக அறிமுகமானார்.

அதன் பிறகு ஏ ஆர் ரகுமான் இசையில் பம்பாய், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, படையப்பா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் பாடல்களை பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட சுமார் 3000 பாடல்களை இவர் பாடியுள்ளார் .

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் இரண்டாவது மகள் சுனந்தாவின் சமீபத்திய போட்டோ சூட் புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ளார். கார்ப்பரேட் நிறுவன மீடியா சம்பந்தப்பட்ட பணியில் இவர் ஈடுபட்டு வருவதால் ஒரு மாற்றத்திற்காக இந்த போட்டோ சூட் புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த போட்டோ சூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க