மீனாவின் கணவர் மரணத்திற்கான உண்மை காரணம் இதுதான்…. கலா மாஸ்டர் ஓபன் டாக்…. வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் பரவி வருகின்றன. இதனிடையே மீனா அறிக்கை வெளியிட்டு வதந்தி பரப்பாதீர் என கேட்டுக்கொண்டார். இந்நிலையில் மீனாவின் கணவர் மரணத்திற்கான உண்மை காரணம் என்ன என்பது குறித்து கலா மாஸ்டர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

 

அந்த பேட்டியில், பாம்பேவில் இருக்கும் புறா எச்சம் இருந்தால், சுவாசித்தாலே தவறு என சொல்வார்கள். பெங்களூரில் அது நிறைய இருக்கின்றது. இப்படி லட்சத்தில் ஒருவருக்கு மட்டும் தான் infection ஏற்படும். அது சாருக்கும் வந்துவிட்டது”என அவர் கூறியுள்ளார். மீனாவின் கணவர் இறந்ததற்கான உண்மை காரணம் குறித்து கலா மாஸ்டர் அடித்துள்ள இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.