தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் மைதானத்தில் நடிகை கஸ்தூரி டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியின் தொகுப்பாளனியாக நடிகை கஸ்தூரி இருக்கிறார்.

இந்நிலையில் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று கோவை மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லி ஆகிய அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டியில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தொகுப்பாளனையாக இருந்து வரும் நடிகை கஸ்தூரி டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் செம டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுதான் தனது ஸ்டைலில் உள்ள பிட்ச் ரிப்போர்ட் என்றும் அவர் கேப்ஷன் ஆக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் லைக் செய்து அதனை அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க