சர்வதேச நண்பர்கள் தினம்…. ரஜினியின் நெருங்கிய நண்பர்…. இது தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…. நீங்களே பாருங்க….!!!

சர்வதேச நண்பர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பலரும் தங்கள் நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். அதுமட்டுமல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனிடையே நடிகர் ரஜினியும் கமல்ஹாசனும் நண்பர்கள் என்பதை பலரும் அறிந்திருப்போம்.

செகண்ட் ஹீரோவாக நடிப்பதை நிறுத்து ரஜினி, சிங்கிள் ஹீரோவாக நடிங்க என்று சொன்னவர் கமல். அதனை கேட்ட பிறகுதான் சிங்கிள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்க தொடங்கினேன் என்று தனது நண்பனை பற்றி ரஜினிகாந்த் பலமுறை பெருமையாக கூறியுள்ளார். மேலும் ரஜினி அடிக்கடி பார்க்கக்கூடிய ஒரு படம் ஹே ராம். கமல்ஹாசனை இயக்கி நடித்த இந்த திரைப்படம் கடந்த 2000 ஆண்டு வெளியானது.

அந்தத் திரைப்படத்தை இதுவரை 40 முறைக்கும் மேல் தான் பார்த்துள்ளதாக ரஜினி கூறியுள்ளார். அப்படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதுப்புது விஷயங்கள் புரிவதாக ரஜினி கூறினார். தனது நண்பன் இயக்கிய படத்தை பலமுறை பார்த்து ரசித்த ரஜினி நட்பை பாராட்ட தவறாதவர். நண்பனை கொண்டாட தவறாதவர் சூப்பர் ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது.