குடும்பத்துடன் பறக்க இப்படியா?…. வீட்டிலேயே குட்டி விமானம் செய்து அசத்திய கேரள இளைஞர்…. குவியும் பாராட்டு….!!!!

இங்கிலாந்தில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வீட்டிலேயே சிறிய ரக விமானம் ஒன்றை தயாரித்து அசத்தியுள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா என்ற பகுதியை சேர்ந்த அசோக் அலிசேரில் தமரக் ஷன் (38) என்பவர் முதுநிலை பட்டப்படிப்பு பயில்வதற்காக கடந்த 2006 ஆம் ஆண்டு லண்டன் சென்றார். இவர் தற்போது போர்டு கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் மனைவி மற்றும் தனது இரு மகள்களுடன் இவர் வசித்து வருகிறார். இவர் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்று விமானிக்கான உரிமம் பெற்றுள்ளார். இதனிடையே தனி விமானத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அவ்வப்போது தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்வது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தபடியே நான்கு பேர் அமர்ந்து செல்லக்கூடிய சிறிய ரக குட்டி விமானத்தை அவர் உருவாக்கினார். அந்த விமானத்திற்கு தனது மகளின் பெயரான தியாவுடன் “ஜி தியா”என்று பெயரிட்டார். அது மட்டுமல்லாமல் அந்த விமானத்தில் ஜெர்மனி மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு தனது குடும்பத்துடன் பயணம் செய்துள்ளார். அந்த விமானம் செய்வதற்கு 1.80 கோடி செலவு செய்துள்ளார். இவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.