தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடிகை சரண்யா மோகன். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் வெண்ணிலா கபடி குழு, யாரடி நீ மோகினி மற்றும் வேலாயுதம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் இவர்.

இன்று இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தாலும் முன்பொரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவருக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் ரகசிய திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பின்னர் இரண்டு மாதம் கழித்து இரு குடும்பத்தினரும் திருமணத்தை முடிவு செய்தனர்.

அதன் பிறகு திருமணம் முடிந்த பின்னர் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் சரண்யா மோகன் பெற்றெடுத்தார். பின்னர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் சரண்யா மோகனும் அவரது மகளும் ஒரே மாதிரியான ஆடை அணிந்து ரீல் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அதனை ஷேர் செய்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.’
Instagram இல் இந்த இடுகையைக் காண்க