அடடே…. நம்ம கேப்டன் விஜயகாந்த் மருமகளா இது?…. இணையத்தில் கலக்கும் வைரல் புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரின் ஆக்சன் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வெற்றி தான். அந்த அளவிற்கு தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் ரசிகர்களால் கேப்டன் என்று அன்பாக அழைக்கப்படுபவர். நடிப்பு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த்.

அப்படிப்பட்ட சிறந்த ஹீரோவாக விளங்கிய விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் விஜயகாந்த் நடிக்க உள்ளதாக அப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் உறுதி செய்துள்ளார். இந்நிலையில் விஜயகாந்த் இரண்டாவது மகன் விஜய பிரபாகரன் சில வருடங்களுக்கு முன்பே கீர்த்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.