தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ராக்கெட்டரி நம்பி விளைவு. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை பின்னணியை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

இதனை மாதவன் இயக்கியுள்ளார். இந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியானது. மேலும் இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா, கனடா, செர்பியா மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளில் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டது. கடந்த ஜூலை 1ஆம் தேதி பல்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் மாதவன், விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து அதனை அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.
When you get the blessings from a one man industry & the Leagend himself in the presence on @NambiNOfficial -it’s a moment etched for eternity-Thank you for you kindest words on #Rocketry & the affection @rajinikanth sir.This motivation has completely rejuvenated us. We love you pic.twitter.com/ooCyp1AfWd
— Ranganathan Madhavan (@ActorMadhavan) July 31, 2022