மேடையில் பேரறிவாளனுடன் குத்தாட்டம் போட்ட நடிகர் சத்யராஜ்….. இணையத்தை தெறிக்க விடும் வீடியோ இதோ….!!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை எடுத்த பார்த்தசாரதி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில்”குயில் என்பது அற்புதம் 75″என்ற தலைப்பில் பேரறிவாளன் தனது தாய் தந்தைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடினார். அந்த விழாவில் நடிகர் சத்யராஜ், முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் அனைவரும் பேரறிவாளன் தாய் தந்தையை வாழ்த்து சென்றனர். அதன் பிறகு மேடையில் கேக் வெட்டிய குயில் தாசன் மற்றும் அற்புதம்மாள் ஆகியோர் மாலை மாற்றிக் கொண்டு பேரறிவாளனுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் தனது தாய் தந்தைக்கு கேக் ஊட்டி விட்டு மகிழ்வித்தார். இந்த பிறந்தநாள் விழாவில் சமர் பறை இசைக் குழுவினர் இசை முழக்கம் நடைபெற்றது.

அப்போது மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருந்த பேரறிவாளன் நடிகர் சத்யராஜ் உடன் இணைந்து குத்தாட்டம் போட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிய நிலையில் பலரும் அதனை ஷேர் செய்து வருகிறார்கள்.