தமிழில் உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். அதனைத் தொடர்ந்து சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் பூஜ்: தி பிரைட் ஆப் இந்தியா, ஹங்கமா என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வருடம் தொழிலதிபர் நிதின் ராஜன் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.

அந்தக் குழந்தைக்கு அர்ணா பெயர் வைத்த நிலையில், தனது குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை பிரணிதா சுபாஷ். அந்தப் புகைப்படத்தில் நின்று கொண்டு குழந்தை தூங்கும் செம க்யூட்டான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram