தல அஜித்தின் மாமனார், மாமியார் யார் தெரியுமா?…. இணையத்தில் வெளியான புகைப்படம்…. இதோ பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்பட்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பதை தாண்டி மற்ற விஷயங்களிலும் அதிகம் ஆர்வம் கொண்டவர். அவ்வகையில் துப்பாக்கி சூடும் பயிற்சியில் கடந்த சில வருடங்களாக இவர் இருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்திருப்போம். சமீபத்தில் அவர் திருச்சி துப்பாக்கி சூடும் போட்டிக்கு செல்ல யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. ஒரு போலிஸ் அதிகாரியின் உதவியோடு அஜித் ரசிகர்களை சந்தித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இவர் எச்.வினோத் இயக்கத்தில் அடுத்ததாக ஏகே 61 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பல புகழுக்குறிய நடிகர் அஜித் கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நடிகர் அஜித்தின் பெற்றோரை பலரும் பார்த்திருப்போம். இந்நிலையில் நடிகை ஷாலினியின் பெற்றோரும் நடிகர் அஜித்தின் மாமனார் மாமியாருமான பாபு மற்றும் அலிஸ் ஆகியவர்களின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதற்கு கமெண்டு செய்து அதிக அளவில் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.