தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு முன் அறிமுகமானவர் நடிகை நதியா. பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண் ரசிகர்களும் உள்ளனர். ஒரு காலகட்டத்தில் நதியா கொண்டை, நதியா வளையல் மற்றும் நதியா கம்மல் என அவர் பெயரில் வியாபாரமும் செழிப்பாக இருந்தது.

பொதுவாக நடிகைகள் சிலர் இரண்டாவது திரைப்படத்தில் கவர்ச்சியில் குதிப்பார்கள்.ஆனால் தனது இறுதி படம் வரை கவர்ச்சி காட்டாமல் கண்ணியமாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை என்றால் அது நதியா மட்டும் தான். இவருக்கு தற்போது 55 வயதாகிறது. ஆனாலும் தனது இளமை குறையாமல் இன்னும் அப்போது இருந்தது போல இளமையாகவே இருக்கிறார்.

இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் நதியா தற்போது புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் சுத்தமாக துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram