அடடே நம்ம பிக்பாஸ் லாஸ்லியாவா இது..? அம்மாவுடன் க்யூட் புகைப்படம்…. இணையத்தில் கலக்கும் புகைப்படம் இதோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார். முதலில் அறிமுகப்படமான நடிகர் அர்ஜுனுடன் இணைந்து friendship என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இதனைத் தவிர தற்போது மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வார்.

எல்லா நாயகிகளைப் போலவே இவரும் தொடர்ந்து போட்டோ சூட் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அவ்வகையில் சமீபத்தில் வித்தியாசமான உடையில் தனது தாய் மற்றும் தங்கையுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ள நிலையில் ரசிகர்கள் அதற்கு லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படம் இதோ..