சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நடிகையாக வளம் வருபவர் எஸ்தர் அனில் . இவர் முதல் முதலில் மலையாள திரை உலகில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் படத்தில் மோகன்லால் மீனாவின் இளைய மகளாக நடித்து பிரபலமானவர். அதன் பிறகு தமிழ் சினிமாவில் முதல் முதலாக கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

அந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது ஒரு சில மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தனது படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். தற்போது 20 வயதை கடந்த இவர் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் எஸ்தர் அணில் நேற்று வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது. பெங்களூரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பதிவிட்ட நிலையில்,ரசிகர்கள் க்யூட்டாக இருப்பதாகவும் தற்போது அவர் சற்று மெலிந்து விட்டதாகவும் கமெண்ட் தெரிவித்து இணையத்தில் வைரல் ஆக்கி லைக் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram