அடக்கடவுளே… வெறும் ரூ.76,000 பணத்திற்காக இப்படியா?…. விஜய்க்கு வந்த சோதனை….. பின்னணி என்ன?…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் கொடுக்கும். அவ்வகையில் இவரின் அடைப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பீஸ்ட். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு ஓடவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிற  வைத்து வரும் இந்த திரைப்படம் வருகின்ற 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் விஜய் சிறுவயதில் இருந்து வசித்து வந்த வீட்டில் உள்ள பொருட்களை 76000ரூபாய்க்கு கொடுக்காத காரணத்தால் ஜப்தி செய்ய நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் கடந்த 2011 ஆம் ஆண்டு “சட்டப்படி குற்றம்” என்ற படத்தை விளம்பரம் செய்வதற்காக சரவணன் என்பவர் உடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

அதன் பிறகு விளம்பரத்திற்கான பணத்தை பலமுறை சரவணன் கேட்டும் சந்திரசேகர் தரவில்லை. இதனால் சரவணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சரவணனிடம் உடனே பணத்தை தர வேண்டும் என உத்தரவிட்டது. இருந்தாலும் சந்திரசேகர் பணத்தை கொடுக்காத காரணத்தால் சாலிகிராமத்தில் அலுவலகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தையும் ஜப்தி செய்வதற்கு நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

விஜய் சிறுவயதிலிருந்து தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த வீடு தான் தற்போது சந்திரசேகரின் அலுவலக இருக்கும் அந்த வீடு. இந்நிலையில் 76122 ரூபாய் பணத்திற்காக விஜய் வாழ்ந்து வந்த வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஜப்திக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.