அவசரமாக நடந்த திருமணம்… இதனால தான் அவுங்கள கூப்பிடல.. பிரபல சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ உள்ளே ..

பிரபல தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் யாரடி நீ மோகினி. அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நட்சத்திரா. அதில் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது.

இவர் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்து வருகின்றார். இவர் கடந்த சில வருடங்களாக விஷ்வா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் உறவினர்கள் மற்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இரு வீட்டார் முன்னிலையில் மிக எளிமையான முறையில் கோவிலில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. நட்சத்திரா வின் தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இவர்களின் திருமணம் அவசர அவசரமாக நடந்து முடிந்தது. இவர்களின் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நண்பர்கள் மற்றும் திரை பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

அதனால் இதற்கான காரணம் என்னவென்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் நடிகை நட்சத்திரம் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் திருமணம் அவசர அவசரமாக நடந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்தும் நண்பர்களை ஏன் திருமணத்திற்கு அழைக்கவில்லை என்பது குறித்தும் பதில் அளித்துள்ளார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.