திடீரென பூமியின் சுழற்சி வேகம் அதிகரிப்பு…. காரணம் என்ன?…. விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

பொதுவாக பூமி சூரியனைஒருமுறை சுற்றி வருவதற்கு 365 நாட்களையும் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதற்கு 24 மணி நேரமும் எடுத்துக் கொள்கிறது. இந்நிலையில் பூமி 24 மணி நேரத்திற்குள் தனது ஒரு நாள் சுழற்சியை முடித்து விட்டதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது பூமி வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது.

பூமியின் சுழலும் வேகத்தில் ஒரு வினாடி மாறுபாடு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியின் மையப்பகுதி,பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தின் இயக்கமாகிய பல்வேறு காரணங்களால் பூமியின் சுழலும் வேகம் நொடிக்கு நொடி மாறுபடுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றன.

கடந்த ஜூலை 29ஆம் தேதி பூமி 24 மணி நேரத்திற்குள் தனது ஒரு நாள் சுழற்சியை முடித்து விட்டது. இதனால் பூமி வேகமாக சுழல்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி பூமி மிகவும் வேகமாக சுழன்று 24 மணி நேரத்திற்குள் தனது ஒரு நாள் சுழற்சியை நிறைவு செய்தது. இந்த வருடம் அதனைப் போலவே பூமி தனது சுழற்சியை அதிகரித்துள்ளது.

அடுத்த ஆண்டு இதைவிட வேகமாக சுழலும் என விஞ்ஞானிகள் கூறுகின்றன. பூமி எதனால் வேகமாக சுழன்றது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள். இருந்தாலும் பருவநிலை மாற்றம், கடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பூமியின் உள்பாகத்தில் ஏற்படும் மாற்றத்தினால் பூமி வேகம் அதிகரித்திருக்கலாம் என கூறப்படுகிறது.