தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகப் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளன. அதில் வீட்டு வேலைக்கார பெண்ணாக செல்வி என்பவர் நடித்து வருகிறார்.

அந்த சீரியல் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் கம்பம் மீனா.

இந்நிலையில் கம்பம் மீனாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போதே திருமணம் ஆகிவிட்டது. திருமணத்திற்கு பின்னர் குழந்தைகள். அதன் பிறகு தனது கணவருக்கு உதவியாக இருக்க எல்ஐசி ஏஜென்ட் ஆக இருந்துள்ளார்.

முதன் முதலில் தேனி மாவட்டத்தில் தெற்கத்தி பொண்ணு சீரியல் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது மீனாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து களவாணி, ராவணன் உள்ளிட்ட 75 படங்களில் இவர் நடித்துள்ளார். சீரியலில் ஒரு பக்கமும்,திரைப்படங்களில் மறுபக்கமும் நடித்து அசத்தி கொண்டிருக்கும் கம்பம் மீனாவுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
