படுக்கைக்கு செல்லாததால் பட வாய்ப்பு கிடைக்கல…. பிரபல பாலிவுட் நடிகை ஓபன் டாக்…. வெளியான திடுக் தகவல்…..!!!!

ஹாலிவுட் சினிமாவில் வெளியான மர்டர் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்று கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை மல்லிகா ஷெராவத். இவர் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தசாவதாரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தற்போது 45 வயது. ஆனால் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் அதிக அளவில் கிடைக்கவில்லை. அவ்வபோது தனது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் இவர் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முன்னணி நடிகர்களுடன் படுக்கையை பகிர மறுத்ததால் எனக்கு பட வாய்ப்புகள் கொடுக்கவில்லை, உட்காரு, எழு என்று ஹீரோ என்ன சொன்னாலும் செய்ய வேண்டும். காலை 3 மணிக்கு ஹீரோ போன் செய்து என் வீட்டிற்கு வா என்றால் உடனே செல்ல வேண்டும்.

அப்படி செய்தால் மட்டுமே பணம் கிடைக்கும். ஹீரோ அழைத்ததும் உடனே செல்லாவிட்டால் படத்திலிருந்து நீக்கப்படுவார்கள். இப்படி படுக்கையை பகிர மறுத்ததால் பல வாய்ப்புகள் எனக்கு வராமல் போனது. தங்கள் கட்டுப்பாட்டில் தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்டு அட்ஜஸ்ட் பண்ணும் நடிகைகளை மட்டும்தான் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அது எனக்கு பிடிக்காது என்று மனம் திறந்து பேசி உள்ளார் நடிகை மல்லிகா ஷெராவத். இவர் கூறியுள்ள இந்த கருத்து சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.