தி லெஜண்ட்…. விமர்சனங்களை தெறிக்க விட்ட சரவணன் அருள்…. வைரலாகும் டுவிட்டர் பதிவு….!!!!!

சரவணா ஸ்டோர் தொழிலதிபரான அருள் சரவணன் நடித்த தி லெஜண்ட் திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2,500 திரையரங்குகளில் வெளியானது.அப்படத்தில் அருள் சரவணன் மனைவியாக கீர்த்திகா திவாரி என்பவர் நடித்திருந்தார். மேலும் அவரின் காதலியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டாலா என்பவர் நடித்திருந்தார்.

ஜோடி ஜெர்ரி இயக்கத்திலும் தொழிலதிபர் சரவணன் நடித்துள்ள தி  லெஜன்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாள மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவானது. இந்தத் திரைப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களை விநியோகம் செய்த கோபுரம் சினிமாஸ் அன்பு செழியன் இந்த படத்தை அதிக முன் பணம் கொடுத்து தமிழக முழுவதும் வெளியிட்டது. இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் பலவிதமான கமெண்ட்களை இணையத்தில் தெறிக்க விட்டு வருகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் சரவணன் அருள் குறித்து பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இந்த விமர்சனங்கள் எதையும் கண்டு கொள்ளாமல் சரவணன் அருள் அவரின் ட்விட்டர் பக்கத்தில், அமோக வரவேற்பை கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி என்று பதிவிட்டு படத்தின் பிரமோஷனுக்காக கேரளாவிற்கு சென்றபோது எடுத்த புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.