இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. அதில் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வருகை தந்தனர்.

திருமணத்தில் புகைப்படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் திருமணம் முடிந்த பிறகு விக்னேஷ் சிவன் ஒவ்வொரு புகைப்படங்களாக இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இவர்களின் திருமண விடியோவை நெட் பிளிக்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது.

இந்நிலையில் குக் வித் கோமாளி மூன்றாம் சீசனில் போட்டியாளராக களம் இறங்கிய ராகுல் தாத்தா சர்ச்சையான கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் சிறிய ரோடில் நடித்து பிரபலமானவர் ராகுல் தாத்தா. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி மூலமாக மேலும் அவர் பிரபலமடைந்தார்.

இந்நிலையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் சூட்டிங் அனுபவம் பற்றி அண்மையில் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் விக்னேஷ் சிவன் பார்ப்பதற்கு பிரபுதேவா போல இருக்கிறார் என்று அவரிடமே கூறினார். அதாவது நயன்தாராவின் முன்னாள் காதலர் பிரபுதேவா சாடையில் விக்னேஷ் சிவன் இருப்பதால்தான் அவர்கள் காதலித்து திருமணம் வரை சென்றார்கள் என்று மறைமுகமாக ராகுல் தாத்தா கூறிய இந்த கருத்து இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
