இந்த ஹீரோக்கள் மட்டும் வேண்டவே வேண்டாம்…. ஸ்ரீதேவி மகள் சர்ச்சை பேட்டி…. காரணம் என்ன தெரியுமா….????

இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

இவர் முதன் முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு சில பாலிவுட் படங்களில் இவர் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட்லக் ஜெர்ரி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் ரீமேக்கில் அமைந்த குட்லக் ஜெர்ரி படத்தின் ப்ரோமோஷன் காக ஜான்வி அளித்துள்ள பேட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது அந்த பேட்டியில், பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் என கொண்டாடப்படும் ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான் உடன் நடிக்கும் ஆசை உங்களுக்கு உள்ளதா என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஜான்வி, அவங்க எல்லோரும் வயதில் என்னை விட பெரிய ஸ்டார்கள். அதனால் அவர்களுக்கு ஜோடியாக நடித்தால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்று வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். அது மட்டுமல்லாமல் வருண் தவான்,ரன்பீர் கபூர் போன்ற இளம் பாலிவுட் ஹீரோக்களுடன் நடிக்கவே தான் ஆசைப்படுவதாக அவர் மனம் திறந்து பேசியுள்ளார். அவரின் இந்த பதில் பாலிவுட் திரை உலகில் புதிய பரபரப்பு கிளப்பி உள்ளது.