தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் கொடுக்கும். அவ்வகையில் இவரின் அடைப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பீஸ்ட்.

ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு ஓடவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். மிகப்பெரிய எதிர்பார்ப்பை எதிர வைத்து வரும் இந்த திரைப்படம் வருகின்ற 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் கைகோர்ப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜயின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அவ்வகையில் சிறு வயதில் நடிகர் விஜய் தனது அம்மா ஷோபாவிற்கு சால்வை போர்த்தும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் அதனை அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.
