சரவணா ஸ்டோர் தொழிலதிபரான அருள் சரவணன் நடித்த தி லெஜண்ட் திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2,500 திரையரங்குகளில் வெளியானது. அப்படத்தில் அருள் சரவணன் மனைவியாக கீர்த்திகா திவாரி என்பவர் நடித்திருந்தார். மேலும் அவரின் காதலியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டாலா என்பவர் நடித்திருந்தார்.

ஜோடி ஜெர்ரி இயக்கத்திலும் தொழிலதிபர் சரவணன் நடித்துள்ள தி லெஜன்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாள மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவானது. இந்தத் திரைப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் பலவிதமான கமெண்ட்களை இணையத்தில் தெறிக்க விட்டு வருகிறார்கள்.

இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஹீரோ கதையில் சரவணன் அருள் அடுத்ததாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரின் மனைவி தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மிக நெருங்கிய சொந்தம். அதாவது தமிழிசையின் தாயார் சரவணன் மனைவிக்கு சின்னம்மாள் உறவு முறையாகும்.

அதாவது தமிழிசைக்கு சரவணன் மனைவி அக்கா மகள். எனவே இதை வைத்து பார்த்தால் தமிழிசை சௌந்தர்ராஜன் சரவணன் அருளுக்கு மாமியார் உறவு முறை என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
