பிரபல நடிகர் மொட்டை ராஜேந்திரன் தற்போது பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக அறிமுகமான இவர், நான் கடவுள் படத்தில் வில்லனாக மிரட்டினார். அதன் பிறகு காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். எப்போதுமே மொட்டை தலை மற்றும் கரகர வென்ற தனித்த குரல் கொண்ட இவரை அனைவரும் மொட்டை ராஜேந்திரன் என்று தான் அழைப்பார்கள்.

ஆரம்ப காலத்தில் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு சிறிய சிறிய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. அதனைத் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்திலும் காமெடி கதாபாத்திரத்திலும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் அசத்தி வந்தார்.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்,கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு நடித்ததால் தான் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது.எனது திறமைக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நான் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. சினிமாவில் ஆரம்ப காலத்தில் நான் டீடியும் பீடியும் தான் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன்.

ஒரு காலத்தில் சினிமாவிற்கு எதையும் செய்தேன்.தற்போது வாய்ப்புகள் தேடி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர் அலுவலகங்களை தேடி தேடி அலைந்து கொண்டிருக்கிறேன் என்று மிகுந்த வருத்தத்துடன் அவர் தெரிவித்துள்ளார். இவர் கூறியுள்ள இந்த கருத்து இணையத்தில் வைரலான நிலையில் இவருக்கு இப்படி ஒரு நிலைமையா என்று ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றன.