தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட நடிகர்கள். இதில் விஜயின் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஹிட்ஆகாததால் தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதனைப் போலவே உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் பாகுபலி வசூல் சாதனையை முறியடித்து மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தமிழகத்தின் வசூல் மன்னர்களான விஜய் மற்றும் கமல் இருவரும் தங்களது சம்பளத்தை அடுத்த படத்தில் இருந்து உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நடித்து வரும் வாரிசு பணத்திற்கு 120 கோடியை விஜய் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.

இதை மேலும் 10 கோடி உயர்த்தி தளபதி 67 படத்திற்கு 130 கோடி வாங்க உள்ளாராம். அதனைப் போலவே விக்ரம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் கமலும் அடுத்த படங்களுக்கு இதே சம்பளத்தை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.