மாடு மேய்க்கும் பிரபல தமிழ் நடிகர்…. அதுவும் மாட்டுடன் பேசி கொண்டே….. இணையத்தில் வெளியான வீடியோ இதோ…..!!!!

நடிகர் மன்சூர் அலிகான் தன்னுடைய வீட்டில் மாட்டை குளிக்க வைத்து,அதனை மேய்த்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் மன்சூர் அலிகான். விஜயகாந்த் நடிப்பில் உருவான கேப்டன் திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. வில்லனாக மட்டுமல்லாமல் கேரக்டர் ரோல்களிலும், காமெடி நடிகராகவும் நடித்து வருகிறார். இவர் படம் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது கருத்துள்ள மற்றும் சில வேடிக்கையான வீடியோக்களையும் இவர் இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது மன்சூர் அலிகான் தன்னுடைய வீட்டில் உள்ள மாடுகளை குளிப்பாட்டி தீவனம் வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மாட்டுடன் பேசிக்கொண்டே அதனை அவர் குளிப்பாட்டி விடுகிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அதனை அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள். இது போன்ற எதையாவது அவ்வப்போது செய்து சமூக வலைத்தள ட்ரெண்டிங்கில் தவறாமல் இடம் பிடித்து விடுவார் மன்சூர் அலிகான். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது மகனை கிண்டல் செய்த வீடியோ வைரலானது.