சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளுமோ அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன. மிமிக்ரி செய்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து பிரின்ஸ் மட்டும் அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள மாவீரன் திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு பட குழுவால் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் படிப்பதாக கூறப்பட்டது . அதாவது மாவீரன் திரைப்படத்தில் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியாகின.

இதனிடையே பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின் கடந்த 2014 ஆம் ஆண்டு கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நட்சத்திரங்கள் குறித்து ஒரே வார்த்தையில் பதில் அளிக்க கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தக் கேள்விகளுக்கு பதில் அளித்த மிஸ்கின், ரஜினிகாந்த்- முள்ளும் மலரும், அஜித்-பெரிய மனதுக்காரர், சிவகார்த்திகேயன்- தெரியாது என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்துள்ளார்.

ஆனால் தற்போது என்னவோ சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் வில்லானாக நடிப்பதற்கு மிஸ்கின் ஒப்பந்தமாகியுள்ளார். அன்று சிவகார்த்திகேயன் யார் என்றே தெரியாது என கூறியவர் தற்போது அவருடன் ஒன்றாக இணைந்து படத்தில் நடிக்க இருப்பது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.