சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல். பிரபல பாலிவுட் நடிகையான இவர் தமிழில் மின்சார கனவு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தத் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

குறைந்த திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்தி மொழியில் முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்து வருகிறார். சமீபகாலமாக சொற்பமான சில படங்களில் நடித்து வருகின்றார். இவரது கணவர் நடிகர் அஜய் தேவ்கன் இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இந்தியா முழுவதும் நடிகை கஜோலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவர் இதுவரை instagram பக்கத்தில் 732 பதிவுகளை மட்டுமே பதிவிட்டுள்ளார். இவருக்கு கிட்டத்தட்ட 12.6 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். எப்போதாவது வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிடும் நடிகை கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் ஜோடிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

இந்நிலையில் கஜோலின் பிறந்தநாள் அன்று அவரின் மகள் நைசா தேவ்கன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் கஜோலுக்கு இவ்வளவு பெரிய மகளா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
