“இவர் தான் என் கணவர்”…. பிரபல நடிகரின் முன்னாள் மனைவி…. இன்ஸ்டாவில் போட்ட POST….!!!!

சிறுத்தை சிவாவின் தம்பியும் நடிகருமான பாலாவின் முன்னாள் மனைவி அமிர்தா சுரேஷ், மலையாளத்தில் நிறைய பாடல்களைப் பாடியுள்ளார். இவரும் பாலாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனிடையே கடந்த ஆண்டு இவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது.

இருவரும் தனித்தனியே வாழ்ந்து வரும் இடையில் கோபி சுந்தரை அமிர்தா காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக செய்தி பரவியது. மலையாள இசையமைப்பாளர் ஆன கோபி சுந்தர் தமிழில் தோழா மற்றும் பெங்களூரு நாட்கள் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அமிர்தா சுரேஷ்,தனது பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார். அதில் இவரின் சகோதரி மற்றும் கோபி சுந்தர் ஆகியோர் இருந்தனர்.

மேலும் அந்த பதிவில், கோபி சுந்தர், உனக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. எனக்கு இது மிகவும் சிறப்பான பிறந்தநாள். என் கணவரை நீ சிறப்பானவர், நன்றி என்று கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவில் கோபி சுந்தரை அமிர்தா சுரேஷ் கணவர் என்று குறிப்பிட்டுள்ளதால் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கலாம் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.