2வது திருமணம்…. 10 வருடங்கள் கழித்து மனம் திறந்த வி.ஜே.மகேஸ்வரி….. மனம் உருக பேட்டி….!!!!

தொலைக்காட்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை மற்றும் சினிமா நடிகை என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வருபவர் விஜே மகேஸ்வரி. இவர் முதலில் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகி சப்போர்ட் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். திருமணமான காரணத்தினால் தனது கரியருக்கு சற்று பிரேக் விடுத்தார். கணவன் மற்றும் குழந்தைக்காக நேரத்தை செலவிட்டார். இவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரையில் விவாகரத்து ஆகி பத்து வருடங்கள் ஆகிறது. தற்போது இவருக்கு கேசவ் என்ற மகன் ஒருவர் இருக்கிறார்.

இந்நிலையில் பத்து வருடங்கள் கழித்து தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசி உள்ளார் மகேஸ்வரி. இது தொடர்பாக பேசிய அவர், பத்து வருடத்திற்கு மேலாக நான் இன்னும் சிங்கிளாக தான் இருக்கிறேன் .என்னுடைய திருமணம் சில காரணங்களால் விவாகரத்தை நோக்கி சென்றது. இதை நினைத்து பலமுறை நான் கஷ்டப்பட்டு உள்ளேன்.

திருமணம் நடந்து ஒரே வருடத்தில் பிரிந்து விட்டதால் குழந்தையை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என்பதில் நான் கவனம் செலுத்தினேன். இரண்டாவது திருமணம் குறித்து நினைக்கும் போதெல்லாம் எனக்கு பயம் அதிகமாகின்றது. என் அம்மாவைப் போலவே நானும் சிங்கிள் மதர் ஆக இருக்கின்றேன். என்னுடைய பையன், என் அம்மா,என் வேலை என இதில் மட்டும் தான் நான் கவனம் செலுத்தி வருகிறேன் என்று மனம் உருகி மகேஸ்வரி பேசியுள்ளார்.