சரவணா ஸ்டோர் தொழிலதிபரான அருள் சரவணன் நடித்த தி லெஜண்ட் திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2,500 திரையரங்குகளில் வெளியானது.அப்படத்தில் அருள் சரவணன் மனைவியாக கீர்த்திகா திவாரி என்பவர் நடித்திருந்தார். மேலும் அவரின் காதலியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டாலா என்பவர் நடித்திருந்தார்.

ஜோடி ஜெர்ரி இயக்கத்திலும் தொழிலதிபர் சரவணன் நடித்துள்ள தி லெஜன்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாள மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவானது. இந்தத் திரைப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். நடித்த முதல் படமே 2500 திரையரங்குகளில் வெளியாகி ஒரே வாரத்தில் 10 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பிரபல தொழிலதிபரான இவர் தனது வீட்டில் சொந்தமாக பத்துக்கும் மேற்பட்ட கார்களை வைத்துள்ளார். அதில் சில கார்கள் அவர் நடித்த விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அவர் சொந்தமாக வைத்திருக்கும் கார்களின் விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதன் விலை மதிப்பை கேட்கும்போது தலை சுத்தும் அளவிற்கு உள்ளது.

- Rolls Royce G host- ரூ.7 முதல் ரூ. 8 கோடி
- Ferrari 488 GTB- ரூ. 3.68 கோடி
- Rolls Royce Wraith- ரூ. 5 கோடி
- Lamborghini Huracan- ரூ. 3.73 கோடி
- Rolls Royce Phantom- ரூ. 9 முதல் ரூ. 10 கோடி
- Prosche Panamera GTS- ரூ. 2.02 கோடி
- Bentley Mulsanne- ரூ. 6 கோடி
- Aston Martin DB11- ரூ. 3.3 கோடி
- Bentley Bentayga- ரூ. 4.10 கோடி
- Lamborghini Urus- ரூ. 3.10 கோடி