கணவர் இறந்து ஒரு மாதம் கழித்து…. இணையத்தில் வெளியான மீனாவின் புகைப்படம்…. அதுவும் யாருடன் தெரியுமா….?????

தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் பரவி வருகின்றன. இதனிடையே மீனா அறிக்கை வெளியிட்டு வதந்தி பரப்பாதீர் என கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் தனது கணவர் உயிரிழந்து ஒரு மாதத்திற்கு மேலாகும் நிலையில் அந்த துயரத்தில் இருந்து மீனா தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். அவரை நெருங்கிய தோழிகளும் மற்றும் பிரபல நடிகைகளான சங்கவி, சங்கீதா மற்றும் ரம்பா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

அவர்கள் மூவரும் குடும்பத்துடன் வந்து மீனாவை சந்தித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். கணவர் இறந்த பிறகு முதல் முறையாக வெளியான புகைப்படத்தை பார்த்து அவரை சந்தித்தில் மிகுந்த மகிழ்ச்சி என ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.