நடிகர் அஜித் முதல்முறையாக நடித்த திரைப்படம்….. அதுவும் பள்ளி சீருடையில்…. இணையத்தை தெறிக்கவிடும் அன்சீன் புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்பட்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பதை தாண்டி மற்ற விஷயங்களிலும் அதிகம் ஆர்வம் கொண்டவர். அவ்வகையில் துப்பாக்கி சூடும் பயிற்சியில் கடந்த சில வருடங்களாக இவர் இருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்திருப்போம்.

சமீபத்தில் அவர் திருச்சி துப்பாக்கி சூடும் போட்டிக்கு செல்ல யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. ஒரு போலிஸ் அதிகாரியின் உதவியோடு அஜித் ரசிகர்களை சந்தித்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனிடையே இவர் எச்.வினோத் இயக்கத்தில் அடுத்ததாக ஏகே 61 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவரின் திரைப்படங்கள் எப்போதும் தொடர்ந்து வசூல் சாதனையை படைத்து வருகின்றன. அப்படி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அஜித் தமிழில் முதல் முறையாக நடித்த திரைப்படம் என் வீடு என் கணவர்.

இந்த திரைப்படம் 1990 ஆம் ஆண்டு வெளியானது.அதில் நடிகர் அஜித் பள்ளி சீருடை முதல் முறையாக குழந்தை நட்சத்திரமாக நடித்த காட்சி குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இந்த புகைப்படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் இதனை இணையத்தில் அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.