முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் முதன் முதலாக ஹீரோயினியாக களமிறங்குகிறார்.

அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், கருணாஸ், ராஜ்கிரன் உள்ளிட்டோர் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் மதுரையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் தனது முதல் திரைப்படத்திலேயே யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் ஒன்றையும்அதிதி பாடியுள்ளார். மதுரை வீரன் என்று தொடங்கக்கூடிய அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பாடல் குறித்து புதிய தகவல் ஒன்றை இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அதாவது முதலில் இந்த பாடலை பாடியது சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலட்சுமி தான் என கூறப்படுகிறது. அவர்தான் இந்த பாடலை முதலில் பாடியதாகவும் ஆனால் திடீரென அவரின் குரலை நீக்கிவிட்டு அதிதி சங்கரை பாட வைத்ததாக கூறப்படுகிறது. அதனால் சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி பெரிய ஏமாற்றம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
