“இங்க வாமா, நீ தான் என் தங்கச்சி”….. வடிவேலு செய்த செயலால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்……!!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இன்றும் பலரின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் காமெடி நடிகர் வடிவேலு. இவரின் நகைச்சுவைக்கு சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சமூக வலைத்தளங்களின் எப்போதும் இவரது பெயர்தான். ஒரு ட்ரோல் செய்தால் கூட அதில் கட்டாயம் வடிவேலு பெயர் இடம் பெற்று இருக்கும்.

சமூக வலைத்தளங்களின் நெட்டிசனல் பலரும் இவரை வைத்து தான் ட்ரோல் செய்கின்றனர். அந்த அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர். நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருக்கும் இவரது நடிப்பில் தற்போது நாய் சேகர் returns மற்றும் மாமன்னன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

அதில் நடிகர் வடிவேலு ஹீரோவாக களமிறங்குகிறார்.பல வருடங்களுக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் இந்த இரண்டு திரைப்படங்களையும் திரையில் காண வடிவேலு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு நடிகர் வடிவேலு நேற்று மாலை வருகை தந்தார். அந்த கோவிலுக்கு நடிகர் வடிவேலு வந்த தகவல் தெரிய வந்து அவரை பக்தர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்தனர்.அப்போது அங்கு துப்புரவு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவர் தயங்கியபடி வந்து வடிவேலுவின் காலில் விழுந்து வழங்கினார் .

உடனே அந்தப் பெண்ணை தூக்கி விட்டதுடன் நன்றாக இருங்கள் என்று அவரை வடிவேலு வாழ்த்தினார். அந்தப் பெண்ணை வாமா நீ தான் என் தங்கச்சி என்று கூறியபடி ஆறத் தழுவி தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்துவிட்டு அங்கிருந்து வடிவேலு புறப்பட்டார். அவரின் இந்த செயலை ரசிகர்கள் நெகிழ்ந்து பாராட்டி வருகிறார்கள்…