சமந்தாவை நேரில் பார்த்தால் என்ன பண்ணுவீங்க?….முன்னாள் கணவர் நாகசைதன்யா பகீர் பேட்டி….!!!!

தெலுங்கு திரைப்படங்களில் ஜோடி சேர்ந்த நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திடீரென அவர்களது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட கூட்டறிக்கையில் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

எங்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும், நீண்ட ஆலோசனை மற்றும் சிந்தனைக்குப் பிறகு சாமும் நானும் எங்கள் சொந்த பாதையில் செல்ல கணவன் மனைவியாக பிரிந்து செல்ல முடிவு செய்தோம். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.

எங்கள் உறவின் அடிப்படையானது எங்களுக்கிடையில் எப்போதும் ஒரு சிறப்பு பிணைப்பை கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் நாக சைதன்யா தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் படங்களில் நடிப்பதில் பிஸியாக உள்ளன.

இந்நிலையில் அமீர்கானின் லால்சிங் சந்தா படத்தில் நடித்துள்ள நாக சைதன்யா அந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் . அப்போது சமந்தாவை நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நாகசைதன்யா, ஒரு ஹாய் சொல்லிவிட்டு கட்டிப்பிடிப்பேன் என்று பேசி உள்ளார் .மேலும் அவர் கையில் இருக்கும் டாட்டூ பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது அது தன் திருமண நாள் என்றும் அந்த டாட்டூவை அழிக்கும் எண்ணம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.