நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை, தாத்தா யார் தெரியுமா?…. இதுவரை பலரும் அறியாத வியக்கவைக்கும் குடும்ப பின்னணி…..!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஏழு வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

இன்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தமிழ் பெண் என எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தவறு. ஐஸ்வர்யா ராஜேஷ் உண்மையில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவராம். அவர் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான்.ஆனால் அவரின் தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் தெலுங்கு சினிமாவில் நடிகர்களாக திகழ்ந்துள்ளனர்.

இவரின் ஒட்டுமொத்த குடும்பமும் சினிமா பின்னணியை கொண்டது. குறிப்பாக அவரின் தாத்தா அமர்நாத் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அவரின் மகனான ராஜேஷ் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாகவும் மலையாளத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் மற்றும் நாகமணி தம்பதியினருக்கு பிறந்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவருக்கு எட்டு வயது இருக்கும் போதே அவரின் தந்தை உயிரிழந்து விட்டார். அந்த துயரத்திலிருந்து மீள முடியாமல் இருந்த நேரத்தில் அடுத்தடுத்து ஐஸ்வர்யாவின் அண்ணன்களும் விபத்தில் உயிரிழந்தனர். இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்டதுதான் ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பம். இதுவரை நடிகையாக மட்டுமே ஐஸ்வர்யாவை பார்த்துள்ள பலருக்கும் அவரின் சோக பின்னணி பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.