விருமன் படத்திற்கு வந்த புதிய சிக்கல்…. நாளை திரைப்படம் வெளியாகுமா?…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான திரைப்படம் கொம்பன். கிராமத்துக் கதையை மையப்படுத்திய அந்தத் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் நடித்திருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் முத்தையா மற்றும் கார்த்திக் கூட்டணி இணைந்துள்ளது.

அதன்படி முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் முதன் முதலாக ஹீரோயினியாக களமிறங்குகிறார்.

அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், கருணாஸ், ராஜ்கிரன் உள்ளிட்டோர் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் மதுரையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே கார்த்திக் மற்றும் முத்தையா கூட்டணியில் உருவான கொம்பன் திரைப்படம் ஏற்கனவே கதை திருட்டில் சிக்கிய நிலையில் அடுத்ததாக தற்போது வெளியாக உள்ள விருமன் திரைப்படமும் அதே பிரச்சினையில் சிக்கியுள்ளது. அதாவது இணை இயக்குனர் ஒருவர் தன்னுடைய கதை தான் விருமன் திரைப்படம் என்று உரிமை கோரி எழுத்தாளர் சங்கத்தில் திடீரென புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆர்கே சுரேஷ் மற்றும் நடிகர் கார்த்தி சமாதானம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை தமிழக முழுவதும் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளதால் திரைப்படம் வெளியாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.