முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் முதன் முதலாக ஹீரோயினியாக களமிறங்குகிறார்.

அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், கருணாஸ், ராஜ்கிரன் உள்ளிட்டோர் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் மதுரையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விருமன் படப்பிடிப்பின் போது, தண்ணீர் கேனை எப்படி எரிய வேண்டும் என்று பலரும் என் மீது தூக்கி எறிந்து ரிகர்சல் பார்த்தனர் என்று காமெடி நடிகர் சூரி தெரிவித்துள்ளார். மேலும் உண்மையிலேயே எனக்கு வழி எடுத்தது என்றும் அதனை சமாளித்து நின்றேன், ஒரு கட்டத்தில் என்னை கொல்ல பார்த்தார்கள், நல்லவேளை தப்பித்து விட்டேன் என்று நகைச்சுவையாக பேசினார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகை அதிதி, சூரி மீது தண்ணீர் கேன் வீசியதற்கு மனம் வருந்த மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.