சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரோஜா சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சின்னத்திரையில் டாப் சீரியல் லிஸ்டில் ரோஜா சீரியல் முதல் இடத்தை பிடித்துள்ளது. தினம்தோறும் இந்த சீரியலை தவறாமல் பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. தினமும் இரவு 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது.

இதனிடையே அந்த சீரியலில் அர்ஜுனாக நடிக்கும் நடிகர் சிபு சூரியன் சீரியலை விட்டு விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் வருத்தம் தெரிவித்ததால் தனது முடிவை மாற்றிக் கொண்ட சிபு சூரியன் சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவருக்கு கடந்த மாதம் ஒரு அழகான குழந்தை பிறந்தது. தன் மகனுக்கு ‘shayan’ என்று பெயர் வைத்துள்ளார். பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் அவர் தனது மகனின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்தார்.

இந்நிலையில் சிபு முதன் முறையாக தனது மகனின் கைவிரலை பிடித்து இருக்கும் படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் நாம் ஒன்றாக இணைந்தால் எல்லாம் சிறப்பாக இருக்கும், தந்தைக்கும் மகனுக்கும் இடையில் மேஜிக்கல் பாண்ட் என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வரும் நிலையில் ரசிகர்கள் அதனை அதிக அளவு இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.