இந்த வயசுல இப்படி ஒரு பாசமா?….. காண்போரை நெகிழ வைத்த சினேகாவின் குழந்தைகள்…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. தனது சிரிப்பின் மூலம் புன்னகை அரசியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இதனிடையே சினிமாவில் பிரபலமான நடிகரான பிரசன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.  திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் கதாநாயகியாக நடிக்காமல் முக்கியமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து சினேகா நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று ரக்ஷா பந்தனை முன்னிட்டு சினேகா மகள் அண்ணனுக்கு ஆரத்தி எடுத்து ராக்கி கட்டியுள்ளார். அந்த வீடியோவை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சிறு வயதிலேயே அண்ணன் தங்கைக்கு இடையே இருக்கும் பாசம் காண்போரை நெகிழ வைத்துள்ளது.

அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பலரும் அதனை இணையத்தில் அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.