சரவணா ஸ்டோர் தொழிலதிபரான அருள் சரவணன் நடித்த தி லெஜண்ட் திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2,500 திரையரங்குகளில் வெளியானது.அப்படத்தில் அருள் சரவணன் மனைவியாக கீர்த்திகா திவாரி என்பவர் நடித்திருந்தார்.

மேலும் அவரின் காதலியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டாலா என்பவர் நடித்திருந்தார்.ஜோடி ஜெர்ரி இயக்கத்திலும் தொழிலதிபர் சரவணன் நடித்துள்ள தி லெஜன்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாள மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவானது. இந்தத் திரைப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் அஜித் மற்றும் விஜய் படங்களுக்கு இணையாக இந்த திரைப்படத்தை புரொமோட் செய்த லெஜென் சரவணன் தனது படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சியும் ஏற்பாடு செய்திருந்தார்.மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.

இதனிடையே கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானதால் லெஜெண்ட் சரவணன் படம் தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் இறுதி வசூல் நிலவரம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தி லெஜன்ட் திரைப்படம் மொத்தமாக 12.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழ் சினிமாவில் அறிமுக நடிகர் ஒருவரின் படம் இந்த அளவிற்கு வசூல் செய்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலமாக அறிமுகப்படுத்திய இவ்வளவு வசூல் ஈட்டிய பெருமையை சரவணன் அருள் பெற்று இருக்கிறார். அதனால் அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.