அஜித்தின் AK 61 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?…. ரசிகர்களுக்கு திடீரென நாளை….. இன்பதிர்ச்சி கொடுக்கும் படக்குழு….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் அஜித். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் நடிகர் அஜித் பிஸியாக உள்ளார். இதில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. படத்தின் பூஜை போடப்பட்டதை தவிர அதன் பிறகு படத்தை குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இருந்தாலும் படத்தைப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு தான் இருக்கின்றன. இந்தத் திரைப்படம் ஒரு வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. மேலும் படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் இதெல்லாம் உண்மையா என இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு கொண்டு வர பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர் . இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது ஏ கே 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் நாளை வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளதால் அன்றைய தினம் ஏகே 61 படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட உள்ளதாம். இந்த படத்திற்கு வல்லமை என்று டைட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாகவே அஜித் நடிக்கும் படங்களுக்கு v என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் டைட்டில் வைக்கப்படுவதாகவும் அவ்வகையில் தற்போதைய ஏகே 61 படத்திற்கு வல்லமை என்று டைட்டில் வைத்துள்ளதாகவும் அது குறித்து அறிவிப்பு நாளை வெளியாகும் எனவும் கூறப்படுகிறது