தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் ரஜினிகாந்த் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இவரைப் போலவே சினிமா உலகில் கமலும் முன்னணி நடிகர் தான். இவர்களின் வயது ஒரு பக்கம் இருந்தாலும் சினிமா ஆர்வம் மட்டும் குறையாமல் இருவரும் தொடர்ந்து நடித்துக் கொண்டே வருகின்றன. இப்போதைய நடிகர்கள் கூட ரஜினி கமலை முந்த முடியாமல் தடுமாறுகின்றனர்.

இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து 80களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளனர்.சில திரைப்படங்களில் கமல் ஹீரோவாகவும் ரஜினி வில்லனாகவும் ஒரு சில திரைப்படங்களில் இருவரும் நண்பர்களாகவும் நடித்துள்ளனர். அதன் பிறகு இருவரும் தனித்தனி படங்களில் நடித்து வந்த நிலையில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்த கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் ஆகிறது.

ஆனால் இன்னும் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நீங்களும் ரஜினியும் இணைந்து நடிப்பீர்களா என்று கமலிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல், நான் எப்போதும் ரஜினியுடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன். அது லோகேஷ் படத்தில் நடக்குமா என்பதை அவரும் ரஜினியும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கமல் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கணக்கராஜ் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அவரிடம் ரஜினி கமலை வைத்து படம் ஏற்றினால் அந்த படம் எந்த மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ரஜினியை ஹீரோவாகவும் கமலை வில்லனாகவும் வைத்து எடுப்பேன் என்று பதில் அளித்துள்ளார்.

மேலும் குருதிப்புனல் போன்ற ஒரு படத்தை எடுக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். ரஜினியும் கமலும் இணைந்து படத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் இது குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.