“எனக்கு அந்த ஹீரோ தான் ரொம்ப பிடிக்கும்”…. அவருடைய தீவிர ரசிகன் நான்…. மனம் திறந்த நாகசைதன்யா…..!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வருபவர் நாக சைதன்யா. இவர் அண்மையில் நடித்துள்ள படம் லால்சிங் சத்தா. இந்தத் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை ப்ரொமோட் செய்ய அமீர்கான் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி சென்னை வந்திருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாக சைதன்யா ஆகியோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து ஊடகம் ஒன்று இருக்கு நாக சைதன்யா பேட்டி அளித்தார். அப்போது தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்களில் எந்த நடிகருடன் இணைந்து நடிக்க நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நாக சைதன்யா, சற்றும் தயங்காமல் நடிகர் சூர்யாவின் பெயரை கூறினார். அதற்கு உடனே தொகுப்பாளர் விக்ரம் படத்தால் ஈர்க்கப்பட்டதால் இப்படி சொல்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு நாகசெய்தன்யா, இல்லை நான் உண்மையிலேயே சூர்யாவின் மிகப்பெரிய ரசிகன்.அவருடன் விரைவில் இணைந்து திரைப்படம் நடிக்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பதில் அளித்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.