“சின்ன பையா போய் பந்து விளையாடு”…. பிரபல கிரிக்கெட் வீரரை வம்புக்கு இழுத்த….. நடிகை ஊர்வசி ரவுடேலா….!!!!

சரவணன் அருள் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தி லெஜன்ட். இந்தத் திரைப்படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக நடிகை ஊர்வசி ரவுடேலா நடித்திருப்பார். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், நான் காசியில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு டெல்லிக்கு வந்து 10 மணி நேரம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

அதனால் சோர்வுற்ற நான் உறங்க சென்று விட்டேன். அப்போது ரிசப் பண்ட் எனக்காக வந்து காத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவர் எனக்கு 16 முறை அழைத்து இருப்பதை நான் பின்பு தான் பார்த்தேன் என கூறியிருந்தார். இந்நிலையில் இதனைப் பார்த்த ரிஷப் பண்ட் இன்ஷாவின் இதற்கு பதில் அளித்துள்ளார்.

அதில், மக்களின் அற்ப புகழ்ச்சிக்கும் தலைப்புச் செய்தியில் இடம் பிடிப்பதற்காகவும் எவ்வளவு பொய் சொல்கிறார்கள் என பார்ப்பதற்கு நகைச்சுவையாக உள்ளது. புகழுக்காக ஏங்கி கிடக்கும் அவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று பதிவிட்ட அவர் அந்த பதிவை சற்று நேரத்தில் நீக்கினார்.

https://twitter.com/SkyPopa63/status/1557579934880907264

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஊர்வசி ரவுடால தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிறியவர்கள் போய் கிரிக்கெட் விளையாட வேண்டும், உன் போன்ற சிறியவர்களால் எல்லாம் நான் அசிங்கப்பட மாட்டேன் என்று பதிலடி கொடுத்துள்ளார். பின்பு அந்த பதிவை அவர் உடனே நீக்கினார்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே வார்த்தை போல் நடந்து கொண்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் ரிஷப் பண்டை வம்பு இழுக்க வேண்டாம் என்றும் நகைச்சுவையாக கமாண்ட் செய்து வருகின்றன.