நான் இதை மட்டும் சொல்லல…. “இந்த சமூகம் ஆணாதிக்கம் நிறைந்தது”….. நடிகை ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வருபவர் சுருதிஹாசன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது சலார் மற்றும் பாலகிருஷ்ணா NPK 107 ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இவர் நடித்து வருகின்றார்.

படங்களில் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டால் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர். இந்நிலையில் சமீபத்தில் ஸ்ருதிஹாசன் திரைத்துறை குறித்து முக்கிய தகவலை பகிர்ந்து உள்ளார்.

அதாவது திரைத்துறையில் ஆணாதிக்கம் நிகழ்வது பற்றி வெளிப்படையாக அவர் பதில் அளித்துள்ளார். சினிமா மற்றும் ஒவ்வொரு வகையான களையும் சமூக மற்றும் நாம் வாழும் காலத்தில் பிரதிபலிப்பு மட்டுமே.நாம் ஒரு ஆணாதிக்க சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்.

சினிமா துறையில் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கிறது. தமிழ் பெண்கள் சினிமா துறைக்கு வர தயங்குவது குறித்து யோசிக்க வேண்டும், ஆணாதிக்கம் என்பது சினிமாவில் மட்டும் கிடையாது, இந்த சமூகம் ஆணாதிக்கத்தால் நிறைந்துள்ளது. எல்லாத் துறையிலும் ஆண்கள் அரசியல் செய்து வருகிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி தான் பெண்கள் சாதிக்க வேண்டியுள்ளது. சில சமயங்களில் சினிமா என்பது கோழி மற்றும் முட்டையின் சூழ்நிலையாக மாறும். பெரும்பாலும் ஒரு கலை, வாழ்க்கையைப் பின்பற்றுகிறது என்று நான் கூறுகிறேன் என ஸ்ருதிஹாசன் வெளிப்படையாக பேசியுள்ளார்.